கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் காலம் கடந்த கடிதங்கள் என்ற தலைப்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் பழமையான கடிதங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் பயன்படுத்தப்பட்ட கடிதங்கள், அஞ்சல் தலைகள், அஞ்சலக உறைகள் போன்றவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மிகப்பழைமையான கடித போக்குவரத்தினை சுட்டிகாட்டும் வகையில் இக்கண்காட்சி வைக்கப்பட்டுள்ளன. 100ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த தபால் நிலையத்தையும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியையும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடம் ரசித்து வருகின்றனர்.

