சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு
Published on

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடித்து விரட்டியனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் என்ற இடத்தில் ஏடி காலனியில் இருக்கும் 4 வீடுகள் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17‌ பேர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்‌டனர். பொதுமக்களி‌ன் உதவியோடு 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட உடல்கள் கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

உயிரிழந்தோருக்கான நிவாரணத்தை 25 லட்சமாக உயர்த்தித்தரவும், விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com