\
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு..!

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு..!

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு..!
Published on

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. Peak Hours நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில்(Non Peak Hours) 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில்கள் ஓடும் எனவும் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com