\
மெட்ரோ ரயில் இயக்குவதில் காலதாமதம் !

மெட்ரோ ரயில் இயக்குவதில் காலதாமதம் !

மெட்ரோ ரயில் இயக்குவதில் காலதாமதம் !
Published on

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, சிக்னல் கோளறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ‌ரயில் நிலையத்தின் நிரந்தரப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மெட்ரோ ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ணாரபேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை எப்போதும் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com