தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது.. வழக்கம்போல் இயங்குகிறது மெட்ரோ ரயில்!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது சரிசெய்யப்பட்டு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு ப்ளூ லைனில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கப்படுவது தாமதமான நிலையில், சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சென்னை மெட்ரோ ரயில்கள்
BLUE LINE மெட்ரோ ரயில் காலதாமதமாக இயக்கம்.. காரணம் என்ன?

இந்நிலையில், ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com