\
சுரங்க மெட்ரோ: டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

சுரங்க மெட்ரோ: டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

சுரங்க மெட்ரோ: டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
Published on

திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை செல்லும் சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவை கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் முதல் சுரங்க வழிப்பாதை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க வழிப்பாதையில் அண்ணாநகர், செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் என 7 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு ரயில் நிலையங்களும் தரைத்தளத்திற்கு கீழே 2 அடுக்குகளை கொண்டுள்ளது. முதல் தளத்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. இதில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் மற்றும் டிக்கெட் கவுன்டர் என 2 வழிகளில் டிக்கெட் பெறலாம்.

திருமங்கலம் முதல் அண்ணாநகர் வரை - ரூ.10

திருமங்கலம் முதல் செனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி - ரூ. 20

திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் வரை - ரூ. 30

திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை - ரூ. 40 என கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com