வண்ணாரப்பேட்டை முதல் கொருக்குபேட்டை வரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
வண்ணாரப்பேட்டை தங்கசாலை முதல் திருவொற்றியூர் வின்கோ நகர் வரை இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் வண்ணாரப்பேட்டை - கொருக்குபேட்டை இடையே 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறை பெற்றுள்ளன. சுரங்கப்பாதையில் 2 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
மேலும், கொருக்குப்பேட்டை முதல் திருவொற்றியூர் வின்கோ நகர் வரை மேல் தளப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பணி 2019- ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுற்று போக்கு வரத்து மக்கள் பயன்பட்டுக்கு வரும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையேயான இந்த வழித்தடம் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படுகிறது.