\
மெட்ரோவில் ஒரே நாளில் 1,20,500 பேர்  பயணம்

மெட்ரோவில் ஒரே நாளில் 1,20,500 பேர் பயணம்

மெட்ரோவில் ஒரே நாளில் 1,20,500 பேர் பயணம்
Published on

சென்னையில் புதிதாக விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இலவச பயண அறிவிப்பால் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்ட்ரல் மற்றும் டி.எம்.எஸ் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையத்தின் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வழிதடங்களின் இடையே இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர். இலவசமாக செல்ல இன்றே கடைசி நாள் என்பதால் காலை முதலே மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com