மியான்மர் To இலங்கை via மணிப்பூர்: சென்னையில் 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

சென்னையில் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 280 கோடி மதிப்புள்ள மெத்தட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள்
போதைப்பொருள்PT

சர்வதேச மதிப்பில் 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்

சென்னையில் 56 கிலோ மெத்தட்டமின் போதை பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

கடந்த பத்தாம் தேதி இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் மெத்தப்டமைன் போதைப் பொருளை கடத்துவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது.

சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி அவரிடம் இருந்து இரண்டு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் போதை பொருளை சப்ளை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் 56 கிலோ மெத்தப்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை செய்ததில் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com