\
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
Published on: 

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஏற்பட்டுள்ளதால் செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. 

இந்நிலையில், வரும் 24 ம் தேதி வரை, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. குறிப்பாக சென்னையில் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடருமென்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம், சென்னை, செங்கல்பட்டு உட்பட 20 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யுமென்றும் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com