\
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
Published on: 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்; ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிடி செல்ஷியஸாகவும் இருக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com