10கிமீ வேகத்தில் கடந்துவரும் ஃபெஞ்சல் புயல்.. 2 மணி நேரத்தில் முழுமையாக கடக்கும்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஃபெஞ்சல் புயலாக உருமாறியது. புயலைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர் முதலிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
முதலில் புயலானது இன்று பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், புயலின் வேகம் குறைந்ததால் இன்று மாலை கரையை கடக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் இருந்து புயலின் முன்பகுதி கரையை கடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.
2 மணி நேரத்தில் முழுமையாக கடக்கும்..
மாலை நிலவரப்படி 4 மணிநேரத்தில் புயல் கரையை கடந்துவிடும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஃபெஞ்சல் புயலானது இன்னும் 2 மணிநேரத்தில் முழுவதுமாக கரையை கடக்கும் எனவும், 10 கிமீ வேகத்தில் கரையை கடந்துவருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.