\
'சென்னையில் மிதமான மழை பெய்யும்'  - வானிலை மையம்

'சென்னையில் மிதமான மழை பெய்யும்' - வானிலை மையம்

'சென்னையில் மிதமான மழை பெய்யும்' - வானிலை மையம்
Published on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com