
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துவரும் நிலையில், இன்று (திங்கள்) 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. அதேபோல் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 31 ஆம் தேதி (நாளை) முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.