\
புயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்

புயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்

புயல் கரையை கடந்த பிறகு இத்தனை மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும் - வானிலை மையம்
Published on

நிவர் புயல் கரையைக் கடந்து செல்லக்கூடிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் பேட்டியளித்தார்.

அதில், “சென்னை, புதுவை மற்றும் கடலூருக்கு மத்தியில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுவைக்கு அருகே கரையை கடக்கும். கரையை கடந்த பின்னரும் சுமார் 6 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் தாக்கம் இருக்கும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்”என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், “இந்த மழை மற்றும் காற்றினால், குடிசை வீடுகள், விளம்பர பலகைகள், மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்படும். வாழை, பப்பாளி போன்ற பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வரையிலும் சமயங்களில் 85 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும். திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com