வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்pt desk
தமிழ்நாடு
“ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது என்பதற்காக அச்சமடைய தேவையில்லை” - வானிலை ஆய்வு மையம்
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என்றார். குறிப்பாக இன்று (செவ்வாய் கிழமை) டெல்டா மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
Rainpt web
தொடர்ந்து நாளை (16 ஆம் தேதி) டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் எனவும் கூறினார்.
மழைப்பொழிவு எப்படி இருக்கும்? புயல் இருக்கா? - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுடன் சிறப்பு நேர்காணல்