தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் எப்படி இருக்கும்?.. வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் எப்படி இருக்கும்?.. வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் எப்படி இருக்கும்?.. வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. லட்சதீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com