\
5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுவரை பெய்த மழையில் தமிழகத்தில் அதிகபட்சமாக களியலில் 11, குழித்துறையில் 10, கன்னியாகுமரியில் 9 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com