“காலை 10 மணி வரை இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்யும்” - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை தொடரும். மேலும் சென்னையில் இடி மின்னலுடன் லேசனானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை
புயல் உருவானால் தமிழகத்தின் நிலை என்ன?

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், தமிழகத்தில் டிசம்பர் 3,4 தேதிகளில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com