தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரவலாக தமிழகத்தில் மழை பெய்துவரும் நிலையில் நாளை மறுநாள் முதல் மீண்டும் சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கிழக்குதிசை காற்றின்வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதிமுதல் மீண்டும் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி, தென்காசி, செங்கோட்டை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு இதுவரை எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.