“நிதிஅமைச்சர் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்; வானிலை மையம் சரியாக கணிக்கவில்லை”-பூவுலகின் நண்பர்கள்

“ஒன்றிய நிதிஅமைச்சர் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்... சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் தான் தந்தார்கள். 20 செ.மீ மழை பெய்யும் என்று தான் கூறியிருந்தார்கள். ”

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை குறித்து வானிலை ஆய்வுமையம் ஐந்து நாட்களுக்கு முன்பே தமிழக அரசிடம் சொன்னதாகவும், அதிநவீன ராடர்களை மாநில அரசிடம் கொடுத்தும் அவர்கள் அதை சரியாக உபயோகிக்காததால், வெள்ளத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்களிடம் கேட்டதற்கு,

“ஒன்றிய நிதிஅமைச்சர் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்... சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் தான் தந்தார்கள். 20 செ.மீ மழை பெய்யும் என்று தான் கூறியிருந்தார்கள். 20 செ.மீ மழைக்கு பிறகு தான் வாநிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தார்கள். இவர்கள் 90 செ.மீ மழை பெய்யும் என்று கூறவில்லை.” என்கிறார். மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கலாம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com