தமிழ்நாடு
மெர்சல் பட பேனர் கட்டிய சிறுவன் சுவர் இடிந்து பலி
மெர்சல் பட பேனர் கட்டிய சிறுவன் சுவர் இடிந்து பலி
காஞ்சிபுரத்தில் மெர்சல் படத்தின் பேனரைக் கட்ட முயன்ற போது சுவர் இடிந்து விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.
தீபாவளியான நாளை விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மெர்சல் படத்திற்காக, காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் விஜய் ரசிகர்கள் சிலர் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக லோகேஷ்வரன் என்ற 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுவரின் மீது ஏறி நின்று பேனரை கட்டியுள்ளனர். அப்போது சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.