சேலம் பூ மார்க்கெட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் - சுத்தம்செய்ய வியாபாரிகள் கோரிக்கை

சேலம் பூ மார்க்கெட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் - சுத்தம்செய்ய வியாபாரிகள் கோரிக்கை
சேலம் பூ மார்க்கெட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் - சுத்தம்செய்ய வியாபாரிகள் கோரிக்கை

பல்லாயிரக்கணாக்கானோர் வந்து செல்லும் சேலம் பூ மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அகற்றவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கிருந்த பூக்கடைகள் நகர பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதிகாலை முதலே இங்கு பூக்கள் விற்பனை தொடங்கும். சில்லறை விற்பனை மட்டுமின்றி மொத்த விற்பனையும் நடைபெறுவதால் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். இதுபோல பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்லக்கூடிய பூ மார்க்கெட்டில் நாள்தோறும் ஏராளமாக குப்பைகள் சேர்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அவ்வாறு கடைகள் முன்பாக தேங்கும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் பூ மார்க்கெட் வளாகத்திலேயே ஒரு பகுதியில் மலைபோல் குவித்து விடுகின்றனர். இந்த குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாவதாக கூறுகின்றனர். எனவே சேலம் பூ மார்க்கெட்டில் தேங்கும் குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்த சேலம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com