தமிழ்நாடு
மின்னல் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு - அரியலூரில் சோகம்
மின்னல் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு - அரியலூரில் சோகம்
அரியலூர் அருகே மின்னல் தாக்கியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (65). இவர் வீட்டைச் சுற்றி மரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் வீட்டின் முன்பு தேங்கியிருந்த மழைநீரை அர்ஜுன் காலால் தள்ளியுள்ளார்.
அப்போது மரத்தின் மீது பாய்ந்த மின்னல், அர்ஜுன் மீது தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.