கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்... சாமர்த்தியமாக மீட்ட தீயணைப்புத் துறை

கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்... சாமர்த்தியமாக மீட்ட தீயணைப்புத் துறை

கிணற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்... சாமர்த்தியமாக மீட்ட தீயணைப்புத் துறை
Published on

ஆவடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் அந்த பெண்ணை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தீபா (25). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இந்த பெண் தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 40அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார். இவர் கிணற்றில் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆவடி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்புத் துறை ஆய்வாளர் வீரராகவன் தலைமையிலான குழுவினர், கிணற்றில் விழுந்த பெண்ணை கயிறுகட்டி சாமர்த்தியமாக உயிருடன் மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com