\
மேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை

மேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை

மேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை
Published on

மேலவளவு கொலைவழக்கில் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வழக்கு முடியும் வரை ஊருக்குள் நுழையக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

13 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன் விடுதலை தொடர்பான அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கு முடியும் வரை 13 பேரும் வேலூரில் தங்கியுள்ளதை மதுரை, வேலூர் எஸ்பிக்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்றைய விசாரணையின் போது, “முன்கூட்டிய விடுதலை செய்ததில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படுவதில்லை. 13 பேர் விடுதலைக்குப் பின்னர் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை" என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com