திருவாரூரில் மருத்துவ மாணவர் விடுதியில் மரணம்: போலீஸ் விசாரணை

திருவாரூரில் மருத்துவ மாணவர் விடுதியில் மரணம்: போலீஸ் விசாரணை

திருவாரூரில் மருத்துவ மாணவர் விடுதியில் மரணம்: போலீஸ் விசாரணை
Published on

திருவாரூரில் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுந்தரவேல்‌ என்ற மாணவர், திருவாரூரில் உள்ள உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயின்று வந்தார். சக மாணவர்கள் வெளியே சென்ற நேரத்தில் கல்லூரி விடுதியில் சுந்தரவேல்‌ தூக்கிட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுந்தரவேலை கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக ‌மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர் சுந்தரவேல் இறந்தது தொடர்பாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் உயிரிழந்தது குறித்து திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com