தமிழ்நாடு
மருந்துக் கடைகள் 30-ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம்
மருந்துக் கடைகள் 30-ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம்
ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-ஆம் தேதி ஒரு நாள் மருந்துக்கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துகடைகளும், தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் மருந்துக்கடைகளும் இந்த கடையடைப்பில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தால் போலி மருந்துகள் அதிகளவில் புழக்கத்திற்கு வரும் அபாயம் உள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
இளைஞர்கள், மாணவ மாணவிகளுக்கு போதை மருந்து, கருத்தடை மாத்திரைகள் தாராளமாக கிடைக்கும் ஆபத்து உள்ளதாகவும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.