\
இன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்
Published on: 

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணி நேர மருந்தகங்கள் அடைப்பு போராட்டம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது.

இந்த மாத தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. அதனை கண்டித்து 24 மணிநேரம் தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை மூடி மருந்து விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவுள்ளனர். உயிர்காக்கும் பொருளான மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனு‌மதிக்கக்கூடாது என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஆன்லைன் மூலம் வாங்கும் போது, மருந்துகள் மாறுவதற்கும், காலாவதியான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் விற்ப‌னையாளர்கள் கூறுகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட மருந்துகளை சிறுவர்கள், தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வாங்குவதற்கும் ஆன்லைன் மருந்து விற்பனை வழிவகுக்கும் என்றும் மருந்தக உரிமையாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com