புதிய தலைமுறை செய்தி எதிரொலி - மலைக் கிராமத்திற்கு கிடைத்த மருத்துவ வசதி

புதிய தலைமுறை செய்தி எதிரொலி - மலைக் கிராமத்திற்கு கிடைத்த மருத்துவ வசதி
புதிய தலைமுறை செய்தி எதிரொலி - மலைக் கிராமத்திற்கு கிடைத்த மருத்துவ வசதி

உடல்நலம் பாதிக்கப்பட்ட மலை கிராமப்பெண்ணை சிகிச்சைக்காக 3 கிலோ மீட்டர் டோலி கட்டி தூக்கிச்சென்ற செய்தி புதியதலைமுறை தொலைக்காட்சியில் வெளியானது. செய்தி எதிரொலியாக மலை கிராமத்தில் 2 படுக்கைகளுடன் தற்காலிக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சி, வெள்ளக்கல் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர்யா(31).  கணவனை இழந்த சவுந்தர்யாவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் வனத்துக்குள்ளிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காட்சிகளுடன் புதியதலைமுறையில் செய்தி வெளியாகிய நிலையில் தற்போது அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவுபடி, அணைகட்டு தொகுதி அத்தியூர் ஊராட்சி குருமலைக்கு மருத்துவர்கள் செல்ல வாடகை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய BMOவிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது மருத்துவர்கள் குருமலை சென்றுள்ளனர்.

குருமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு அறையை எடுத்து, அங்கு இரண்டு படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் செயல்படுவார்கள் எனவும், மேலும் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இருப்பினும் குருமலை பகுதியில் நிரந்தர துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது மலை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com