தமிழ்நாடு
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம்
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்டம் வாழ்க்கையில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இளைஞர்கள், மாணவர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கிய அப்துல்கலாமின் 86-வது பிறந்தநாள் அக்டோபர் மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அப்துல் கலாம் நற்பணிமன்றம் சார்பில் மருத்துவ முகாமிற்கு, திருவாரூர் மாவட்டம் வாழ்க்கையை சேர்ந்த இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நன்னிலம் அரசு மருத்துவ மனையிலிருந்து 7 மருத்துவகுழுவினர் வந்திருந்து சிகிச்சை அளித்தனர். மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதற்கு முன்னதாக அப்துல்கலாமின் திருவுருவ சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செய்யப்பட்டது.