"குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அறிய ஊடகங்கள் உதவுகின்றன" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

"குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அறிய ஊடகங்கள் உதவுகின்றன" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
"குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அறிய ஊடகங்கள் உதவுகின்றன" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

பெண் குழந்தைகளுக்கு எதிரான செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதற்கும் ஊடகங்கள் பெருமளவில் உதவியாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சைபர் குழுவை உருவாக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பல தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டும், அடையாளங்கள் மறைக்கப்பட்டுமே செய்திகள் வெளியிடப்படுதாக தெரிவித்தனர். இருப்பினும் வழிகாட்டுதல்களை ஊடகங்கள் முறையாக கடைப்பிடிக்கின்றனவா என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com