தீபாவளியன்று வரும் மகாவீர் ஜெயந்தி: சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு?

தீபாவளியன்று வரும் மகாவீர் ஜெயந்தி: சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு?

தீபாவளியன்று வரும் மகாவீர் ஜெயந்தி: சென்னையில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு?
Published on

தீபாவளி நாளான நவம்பர் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தீபாவளி நாளன்று தான் பொதுவாக மக்கள் அதிக அளவில் இறைச்சி வாங்குவது வழக்கம். இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சியின் சில மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தீபாவளி தினத்தன்று கடைகளை மூட சொல்லி போடப்பட்டுள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் தங்களது கோரிக்கை குறித்து முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இறைச்சி வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com