\
மாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் :  மதிமுக மாவட்டச்செயலாளர் கைது

மாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் : மதிமுக மாவட்டச்செயலாளர் கைது

மாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் : மதிமுக மாவட்டச்செயலாளர் கைது
Published on

சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தாக்கிய புகாரில் மதிமுக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதிமுக சார்பில் கடந்த 15ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இதற்காக சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் மதிமுகவினர் கொடிகள் மற்றும் சிறிய பதாகைகளை வைத்திருந்தனர். அவற்றை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வரதராஜன் மற்றும் ஊழியர்கள் அகற்றியுள்ளனர். 

அப்போது அங்கு வந்த மதிமுகவினர் வரதராஜன் உள்ளிட்டோரை தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து வரதராஜன் அளித்த புகாரின் பேரில் மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாநகராட்சி அதிகாரி காயம் பட்டிருப்பதை அறிந்து வருந்துவதாக தெரிவித்தார். அதேசமயம் மதிமுகவினரும் காயமடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com