\
“இடப்பங்கீட்டில் தி.மு.க. மீது மதிமுகவுக்கு நம்பிக்கை உள்ளது” - துரை வையாபுரி

“இடப்பங்கீட்டில் தி.மு.க. மீது மதிமுகவுக்கு நம்பிக்கை உள்ளது” - துரை வையாபுரி

“இடப்பங்கீட்டில் தி.மு.க. மீது மதிமுகவுக்கு நம்பிக்கை உள்ளது” - துரை வையாபுரி
Published on: 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி தெரிவித்துள்ளார்.

சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு தங்களுக்கு கடந்த தேர்தலில் இடங்களை ஒதுக்கியதாக துரை வையாபுரி கூறியுள்ளார். இடப்பங்கீட்டில் நல்ல ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ள அவர், கடந்த 3 வருடங்களாக அவர்களுடன் பயணித்து வருகிறோம் என்று துரை வையாபுரி கூறியுள்ளார். 

தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுவதாக தெரிவித்த துரை வையாபுரி, இடப்பங்கீட்டில் தி.மு.க. தலைமை மீது நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com