"நரேந்திர மோடி ஒரு தேசத்துரோகி.." - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு #Video

முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடிபுதிய தலைமுறை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவை தேர்தல் 2024 ல் திருச்சி மக்களவை தொகுதியில் களம் காண்கிறது. அதற்கான பரப்புரைகளில் அக்கட்சியினரும் கூட்டணி கட்சியான திமுகவும் இணைந்து ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, பிரதமர் நரேந்திரா மோடி குறித்தும் காங்கிரஸ் குறித்தும் கச்சத்தீவு விவகாரத்தில் பேசியுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இது குறித்து ANI க்கு அவர் அளித்த பேட்டியில், “முன்பு ஒரு காலத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டை எல்லா வகைகளிலும் புறக்கணித்தது. நரேந்திர மோடி ஆட்சியில் இருந்த இந்த 10 வருட காலம் நரேந்திர மோடிக்கு சோதனைக் காலம். நரேந்திர மோடி ஒரு தேசத்துரோகி. ஒரு காலத்தில் காங்கிரஸ் எப்படி தமிழகத்தை புறக்கணித்ததோ அதுபோல, தற்போது நரேந்திர மோடி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா, இலங்கையை புறக்கணிக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com