மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் திடீர் மோதல்: நடுரோட்டில் அடிதடி!
மதிமுக- நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் திடீரென்று அடிதடியில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் திருச்சிக்கு வந்தனர். அவர்களை வரவேற்க இரு கட்சித் தொண்டர்களும் விமான நிலையத்தின் முன் கூடியிருந்தனர். அப்போது மதிமுகவினர் வைகோவை வாழ்த்தியும் நாம் தமிழர் கட்சியினர் சீமானை வாழ்த்தியும் கோஷமிட்டனர். பின்னர் வைகோ விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தார். அவர் கார் சென்றதும் சீமானை வரவேற்க வந்த கார் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியின் தொண்டர்களும் கொடி கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சித் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையின் அனுமதித்துள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் அந்தப் பகுதி பரபரப்பானது.