தமிழ்நாடு
மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதில் நீட் தேர்வில் 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற தாம்பரத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.
திருச்செந்தூர் மாணவர் ராஜ் அபிஷேக் 2ம் இடம் பெற்றுள்ளார். முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப்பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டார். மருத்துவ படிப்புக்கு ஜூலை 1 முதல் 10 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.