\
மருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்

மருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்

மருத்துவக் கலந்தாய்வில் தேர்வானவர்கள்...இணைய தள பட்டியலில் நீக்கம்
Published on: 

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றோர் மற்றும் தேர்வானவர்கள் பெயர்கள் மருத்துவத் துறை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கலந்தாய்வுக்கு வந்தவர்கள் மற்றும் அதில் தேர்வானவர்களின் பட்டியல், மருத்துவ தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வு விவரங்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இது மாணவர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு பட்டியலில் வெளி மாநிலத்தவர்கள் இருப்பதாலேயே அதை அதிகாரிகள் நீக்கியுள்ளார்களா என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து மருத்துவ தேர்வுத்துறை தலைவர் செல்வராஜிடம் கேட்டபோது, கலந்தாய்வுப் பட்டியல் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com