தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் எத்தனை தெரியுமா?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியாகிறது. இதனால், தகுதி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். 

தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 900 எம்.பி.பி.எஸ். இடங்களில் 2445 மாநில ஒதுக்கீட்டு இடங்களும், 455 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள ஆயிரத்து 300 இடங்களில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 517 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. மேலும், ராஜா முத்தைய்யா மருத்துவக் கல்லூரியில் 127 மாநில ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.  இடங்களும், 23 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

பிடிஎஸ் படிப்பைப் பொறுத்தவரை 1 அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 85 மாநில ஒதுக்கீட்டு இடங்களும், 15 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள ஆயிரத்து 700 இடங்களில் 1020 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ்  இடங்களும் 680 நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களும் உள்ளன. ராஜா முத்தைய்யா பல் மருத்துவக் கல்லூரியில் 68 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இவை இந்திய மருத்துவ கவுன்சிலால் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசு கலந்தாய்வு நடத்தும். அதேபோல, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தும். இவை அனைத்தும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com