accused
accusedpt desk

மயிலாடுதுறை: ரயில்வே கேட் கீப்பரை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக மூவர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில்வே கேட் கீப்பரை கடத்திச் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
Published on

சீர்காழி அருகே கன்னியாகுடி ரயில்வே கேட் கீப்பராக கேரள மாநில அயன்சேரியை சேர்ந்த விஜின் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி அவர் பணிக்கு சென்றபோது, திருப்புங்கூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் விஜினை வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

Police station
Police stationpt desk

மற்றொருவர் விஜினின் மிதிவண்டியை எடுத்துச் சென்றுள்ளார். ஆள் இல்லாத காட்டுப் பகுதிக்குள் விஜினை அழைத்துச் சென்றதுடன், அவரிடமிருந்து 2,400 ரூபாய் ரொக்கம் மற்றும் ஆன்லைன் மொபைல் செயலி மூலம் 6 ஆயிரம் ரூபாயை பணப் பரிமாற்றம் செய்தும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அக்கும்பல் தப்பியோடிய நிலையில், இது தொடர்பாக விஜின் அளித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

மேலும் செல்போன் சிக்னல் உதவியுடன், புலவனூர் பகுதியை சேர்ந்த கவியரசன், அபிஷேக், கடலூர் தர்மநல்லூரை சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய மூவரையும் கைது செய்து, சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com