மயிலாடுதுறை: போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த நபர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த நபர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த நபர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
Published on

கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்கு சென்று வந்த நபர் உயிரிழந்ததால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்திட்டு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஜானகி (72). இவர், கடந்த 22ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையும் மாயமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணல்மேடு போலீசார், இவ்வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அய்யாவு (45) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் மனஉளைச்சலுடன் வீடு திரும்பிய அய்யாவு வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மணல்மேடு காவல் நிலையம் அருகே நடுத்திட்டு பகுதியில் முள் வேலிகளை தடுப்பாக அமைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மணல்மேடு போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதால்தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றம்சாட்டி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இறந்த அய்யாவுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த அய்யாவுவிற்கு கண்ணகி என்ற மனைவியும் வயதிற்கு வந்த 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த போராட்டத்தால் மணல்மேடு - வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் டிஎஸ்பிக்கள் அண்ணாத்துறை, சரணவன் தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com