Rajapt desk
தமிழ்நாடு
மயிலாடுதுறை: யூரியா தெளித்துக் கொண்டிருந்த விவசாய தொழிலாளி வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்
மயிலாடுதுறை அருகே வயலில் யூரியா தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே கோடங்குடி நெடுமருதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமையன் என்பவரது மகன் ராஜா (43). விவசாய கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி வாசு என்பவரின் வயலில் இன்று யூரியா, பொட்டாஷ் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வயலிலேயே மயங்கி விழுந்தார்.
GHpt desk
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.