\
மயிலாடுதுறை: முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - உறவினர்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை: முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - உறவினர்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை: முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - உறவினர்கள் மகிழ்ச்சி
Published on

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கும் பிரவீனாவுக்கும் (25) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்றிருந்த பிரவீனாவிற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்தது. இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரவீனாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடாந்து பரிசோதனை செய்தும் வந்தனர். 9 மாதங்கள் கடந்த நிலையில் பிரவீனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அவர் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (இன்குபேட்டரில்) வைத்து குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வந்தனர். தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com