மு.க.ஸ்டாலின் உரை
மு.க.ஸ்டாலின் உரைpt

மே 1 அன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் அறிஞர் அண்ணா : ஸ்டாலின்

"திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான்..!" - தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
Published on

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் அயாராத உழைப்பை உன்னதப்படுத்தும்விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி அன்று சர்வதேச அளவில், தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்pt

அந்தவகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இங்கு உழைப்பாளர்களை அடையாளப்படுத்தும் சிவப்புநிற சட்டையை அணிந்துவந்த முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், “ மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். உருண்டோடுகின்ற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடையை நெய்பவரும் தொழிலாளி தான்.

இரும்பு காய்ச்சி உருக்குபவனும் தொழிலாளி தான். கடலில் மூழ்கி முத்து எடுப்பவனும் தொழிலாளி தான். உழுது நன்செய் பயிரிடுபவரும் தொழிலாளி தான். அந்த தொழிலாளர்களுடைய இனம் வகுந்து கொண்டாடக்கூடிய திருநாள் தான் மே தினம் என்று அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். மே தின பூங்காவை உருவாக்கித்தந்தவர் கலைஞர். ” என்று தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

” உழைப்பைப்  போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். “

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,

மநீம தலைவர் கமல்ஹாசன், 

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை,

”உழைப்பாளிகளின் உரிமைகளை வென்றெடுத்த மே தின நன்னாளில் உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த'மே தின' நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். “

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com