\
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவு
Published on: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போலவே வில்லிவாக்கத்தில் 19 செ.மீட்டரும், எம்.ஆர்.சி. நகர், நந்தனம் பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டரும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 14செ.மீ, தரமணியில் பத்து செ.மீ, புழல் பகுதியில் 13 செ.மீ, மீனம்பாக்கத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com