தடை செய்யப்பட்ட மாவா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த 421 பேர், சென்னையில் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 12,306 பான் மசாலா மற்றும் மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிப்பவர்களையும், விற்பனை செய்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி தமிழகத்தில் குட்கா வியாபாரம் அமோகமாக நடைபெறுவதாகவும், காவல்துறை உயரதிகாரிகளே லஞ்சம் வாங்கியதாகவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். குட்காவை சட்டசபைக்கே கொண்டு வந்து அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.