\
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது
Published on: 

மதுரை மாநகராட்சியின் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற பெயர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி, மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசு எம்.ஜி.ஆரின் பெயரை பேருந்து நிலையத்துக்கு உறுதி செய்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் பலகை பொருத்தப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com