சிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி

சிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி

சிதம்பரம்: மண்டபத்தை பூட்டிக்கொண்டு ஏராளமானோர் கலந்துகொண்ட சுபநிகழ்ச்சி
Published on

சிதம்பரம் அருகே குடும்ப விழா ஒன்றில் அனுமதியின்றி ஏராளமானோர் கலந்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர
வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாகவே திட்டமிடப்பட்ட சுப நிகழ்ச்சி என்றால் முறையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளுடன் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் அருகே குடும்ப விழா ஒன்றில்
அனுமதியின்றி ஏராளமானோர் கலந்து கொண்டதால், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், தீட்சிதர் ஒருவரின் இல்ல சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
ஏராளமானோர் முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியில்லாமலும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த
காவல் துறையினர், மண்டபத்திற்கு வந்த போது, மண்டபத்திற்குள் இருந்தவர்கள் கதவை பூட்டிக் கொண்டு நிகழ்ச்சியை நடத்திக்
கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே வருவதாக காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து சிலர்
மட்டும் வெளியே வந்தனர். இதனையடுத்து அவர்களை எச்சரித்த காவல் துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com