150 முறை வயிற்றின் மீது ஏறி இறங்கிய புல்லட் பைக்குகள்; ஆடிப்போன கிராமவாசிகள்

கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்று, தன் வயிற்றின் மீது 150 முறை புல்லட் பைக்குகளை ஏறி இறங்க வைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரின் செயல் நீலகிரி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
world record attempt
world record attemptfile image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகாமையில் இருக்கும் சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியராக இருக்கும் இவர், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, தன் வயிற்றின் மீது 150 முறை புல்லட் பைக்குகளை ஏறி இறங்க வைக்க முடிவு செய்துள்ளார் சதீஷ். தொடர்ந்து, இந்த சாதனை முயற்சியை ஊர்மக்களுக்கெல்லாம் தெரிவித்து அழைப்புவிடுத்துள்ளார். புல்லட் பைக்குகள் 150 முறை ஏறி இறங்கும் விதமாக 15 புல்லட்டுகளை ஏற்பாடு செய்த அவர், அவற்றை தலா 10 முறை தன்னுடைய வயிற்றின் மீது ஏற வைத்துள்ளார்.

மேலும், அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பியுள்ளார் சதீஷ்.

இந்நிலையில், சதீஷின் இந்த ஆக்ரோஷமான சாதனை முயற்சி அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com